சென்னை: சிந்தாதிரிப்பேட்டை முக்தியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலச்சந்தர் (33). பாஜக மத்திய சென்னை கிழக்கு மாவட்ட எஸ்.சி. எஸ்.டி. பிரிவுத் தலைவராக இருந்தார்.
இவர் மீது 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 7 வழக்குகள் உள்ளன. இவருக்கு சென்னை பெருநகர ஆயுதப்படை காவலர் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், கடந்த 24-ம் தேதி சிந்தாதிரிப்பேட்டையில் பாலச்சந்தர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி, சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த பிரதீப்(26), அவரது தம்பி சஞ்சய்(24), கூட்டாளிகள் கலைராஜன்(28), ஜோதி(30) ஆகியோரைக் கைது செய்தனர்.
தற்போது 4 பேரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக முழுமையாக விசாரணை மேற்கொள்ள சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக, 4 பேரையும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். வரும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
14 days ago