சென்னை பெரும்பாக்கம் இளைஞர் கொலையில் நீதிமன்றத்தில் 2 பேர் சரண்

By செய்திப்பிரிவு

பெரும்பாக்கம்: சென்னை பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் குடியிருப்பைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (34). இவர் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே சுந்தரமூர்த்தி நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் 2 பேர் அவரை கத்தியால் சரமாரி வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

தகவலறிந்து சென்ற பெரும்பாக்கம் போலீஸார் உடலை கைப்பற்றி பரி சோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர்சம்பவ இடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் பெரும்பாக்கம் விஜய்பாபு, சென்னை அண்ணா நகர் பகுதியைச் சார்ந்த சந்தோஷ் ஆகிய இருவரும் இக்கொலை தொடர்பாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க இருப்பதாகவும் அதன்பின் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

க்ரைம்

3 hours ago

க்ரைம்

6 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

மேலும்