ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஜூன் 9-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
விருதுநகரில் 22 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் ஹரி ஹரன், ஜூனத் அகமது, மாட சாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் 15 வயது சிறுவன் ஒருவர் மட்டும் விடுவிக்கப்பட்டு, சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். அதையடுத்து, கடந்த வாரம் வில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேர் மீது 806 பக்க குற்றப் பத்திரிகையும், இளைஞர் நீதிக் குழுமத்தில் 3 சிறுவர்கள் மீது 806 பக்க குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேரும் காவல் நீட்டிப்புக்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் படுத்தப்பட்டனர்.
அப்போது, ஹரிஹரன் உள் ளிட்ட 4 பேருக்கும் ஜூன் 9-ம் தேதி வரை 11 நாள் சிறைக் காவலை நீட்டிப்பு செய்து நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.
அதையடுத்து, ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரும் மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைக் கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
22 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago