அபிராமம் அஞ்சலகத்தில் கொள்ளை முயற்சி: வைப்பு பத்திரம், ரொக்கப் பணம் தப்பியது

By செய்திப்பிரிவு

கமுதி: அபிராமம் அஞ்சலகத்தில் நேற்று முன்தினம் இரவு பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பேருந்து நிலையம் அருகே ஊரின் மையப் பகுதியில் அஞ்சல் அலுவலகம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் அஞ்சலக கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பாதுகாப்பு பெட்டகத்தை உடைக்க முயற்சித்துள்ளனர். முடியாத நிலையில், ஆத்திரத்தில் அஞ்சலக அதிகாரிகளின் மேஜை லாக்கர்களை சேதப்படுத்திவிட்டு, ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த ரூ.2 லட்சம் பணம் மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான அஞ்சலக சேமிப்பு, வைப்பு பத்திரங்கள், காப்பீட்டு ஆவணங்கள் கொள்ளையர்களிடமிருந்து தப்பியது. இதுகுறித்து துணை அஞ்சலக அதிகாரி வேல்முருகன் அளித்த புகாரின் அடிப்படையில் அபிராமம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கமுதி டிஎஸ்பி ப.மணிகண்டன், அபிராமம் ஆய்வாளர் கலைவாணி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

சமீபத்தில் அபிராமம் அருகே கோயில் உண்டியல் திருட்டு, காவல் நிலையம் அருகே வீடுகளில் திருட்டு, தற்போது அஞ்சலக அலுவலகத்தில் திருட்டு முயற்சி என தொடர் நிகழ்வுகள் நடப்பதால் அபிராமம் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

8 hours ago

க்ரைம்

9 hours ago

க்ரைம்

13 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்