உடுமலையில் இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கில் மேலும் இருவர் கைது

By செய்திப்பிரிவு

உடுமலை: உடுமலை ஏரிப்பாளையத்தை சேர்ந்தவர் அஸ்வின். இவரது மனைவி வளர்மதிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் மனைவி கவிதாவுக்கும், சுய உதவிக் குழு மூலம் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை இருந்தது. இவ்விவகாரத்தில் சமரசம் செய்யப்போன இந்து முன்னணி உடுமலை வடக்கு நகர் பொறுப்பாளர் குமரவேலை ( 24) ரஞ்சித் மற்றும் அவருடன் இருந்தவர்கள், ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனர்.

இவ்வழக்கில் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வடக்கு தெருவை சேர்ந்த சிவானந்தம் (30), தூத்துக்குடி சாவளபேரி ஆதியப்பன் (45), கோவையை சேர்ந்த செந்தில் (31) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தை சேர்ந்த ஜான்சன் (31), பாளையங்கோட்டை சமாதானபுரத்தை சேர்ந்த மாரியப்பன் ( 34) ஆகிய இருவரை உடுமலை போலீஸார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ரஞ்சித், கவிதாவை போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

11 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

மேலும்