கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே நண் பரைக் கொன்று புதைத்தவரை, போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத் தனர்.
உளுந்தூர்பேட்டையை அடுத்த களமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன்(40). 6 மாதங்களுக்கு முன்பு பாண்டியன் திடீரென மாயமாகியுள்ளார். இதை யடுத்து பாண்டியனின் சகோதரர் குமார் என்பவர் திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித் தார்.
போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் திருநாவலூர் காவல் நிலையத்தில் இரு தினங்களுக்கு முன்பு சரணடைந்தார்.
அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், பாண்டியன், தனது மனைவியுடன் கூடா நட்புக் கொண்டு பழகி வந்தார். அதைக் கண்டித்தும் அவர் கைவிடமறுத்ததால், மது வாங்கிக் கொடுத்து அவரை கொலை செய்துபுதைத்ததாக வேல்முருகன் தெரி வித்துள்ளார்.
இதையடுத்து வேல்முருகனை போலீஸார் கைது செய்தனர். அவரது குற்ற நடவடிக்கையை தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் குண்டர் சட்டத்தில் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வேல்முருகன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கூடா நட்பை கைவிடமறுத்ததால், மது வாங்கிக் கொடுத்து அவரை கொலை செய்து புதைத்ததாக வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
6 hours ago
க்ரைம்
7 hours ago
க்ரைம்
11 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago