பந்தல் கடை உரிமையாளர் கொலை: கள்ளக்குறிச்சியில் 5 பேர் கைது

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியை அடுத்த புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி (48). இவர் அதே பகுதியில் பந்தல் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கடை முன் நிறுத் தப்பட்டிருந்த மினி லாரியை, அவ்வழியாக பைக்கில் வந்த ராமு என்ப வர், இடித்து விட்டுச் சென்றுள்ளார்.

இதையடுத்து நாராயணசாமி, ராமுவை பிடித்து, ‘ஏன் இடித்தாய்?’ எனக் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், நாராயணசாமியின் மனைவி அஞ்சலை இருவரையும் தடுத்து, நாராயணசாமியை வீட்டுக் குள் அழைத்து வந்துள்ளார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து அங்கு தனது கூட்டாளிகளுடன் வந்த ராமு, நாராயணசாமியை வெளியே வரவழைத்து பலமாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டுகள்ளக்குறிச்சி அரசு மருத்துவம னைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்து வர்கள், உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக நாராயணசாமி மனைவி அஞ்சலை அளித்தப் புகா ரின் பேரில் ராமு, ராஜேந்திரன், அஜித்குமார், அலெக்ஸ் பாண்டியன் மற்றும் பரமேஸ்வரி உள்ளிட்ட 5பேர் மீது உளுந்தூர்பேட்டை போலீ ஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில், முதற்கட்டமாக ராமு, ராஜேந்திரன், பரமேஸ்வரி மற்றும் அஜீத் ஆகியோரை போலீஸார் கைது செய்த நிலையில், வழக்குப் பதிவுசெய்யப்பட்ட அனைவரையும் கைதுசெய்யக் கோரி நாாரா யணசாமியின் உறவினர்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு காவல்துறையினரை கண் டித்து, உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து 5-வது நபர் அலெக்ஸ்பாண்டியனையும் போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, அவர்கள் உடலைப் பெற்றுக் கொண்டு கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

10 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்