திருப்பத்தூர்: ஜாமீனில் வந்த மருமகனை கொலை வெறியுடன் தாக்கிய மாமனார், மாமியார் உள்ளிட்ட 4 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதுார் நாடு ஊராட்சிக்கு உட்பட்ட பெரும்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி காளியப்பன் (32). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பரந்தாமன் மகள் புவ னேஸ்வரி (25) என்பவருக்கும், சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்நிலையில், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த காளியப்பன் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது மனைவி புவனேஸ்வரியை கொலை செய்தார். இந்த வழக்கில் திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து காளியப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருந்த காளியப்பன், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து, மாமனார் வீட்டில் தங்கியுள்ள தனது குழந்தைகளை பார்க்க காளியப்பன் அங்கு சென்றார்.
அப்போது, காளியப்பனுக்கும், அவரது மாமனார் பரந்தாமனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பரந்தாமன் மற்றும் அவரது மனைவி காளி யம்மாள், மகன் சக்திவேல் உள்ளிட்ட சிலர் காளியப்பனை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த காளி யப்பனை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பத்துார் அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காளியப்பன் கொடுத்த புகாரின் பேரில், திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் காளியப்பனின் மாமனார் பரந்தாமன், மாமியார் காளியம் மாள், மைத்துனர் சக்திவேல் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
10 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago