அரியலூரில் திருட்டில் ஈடுபட்ட மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் கைது

By செய்திப்பிரிவு

அரியலூர்: அரியலூர் அருகேயுள்ள தாமரைக்குளம் கிராமத்தில் இயங்கி வரும் ராம்கோ சிமென்ட் ஆலைக் குடியிருப்புப் பகுதி உள்ளது. இங்கு கடந்த 4-ம் தேதி இரவு ஒரு வீட்டின் பூட்டை யாரோ உடைத்து 80 பவுன் நகைகளை திருடிச் சென்றனர்.

இதுகுறித்து அரியலூர் போலீஸார் விசாரித்து வந்த நிலையில், தனிப் படையும் அமைக்கப்பட்டது. சிமென்ட் ஆலைக் குடியிருப்புப் பகுதியில் இருந்த சிசிடிவி பதிவில் வடமாநிலத்தைச் சேர்ந்த சிலர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும், அவர்கள் மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டம் பகோளி கிராமத்தில் தங்கியிருப்பதை அறிந்த தனிப்படை போலீஸார் அங்கு சென்று நான்கா என்ற நான்காபவுரியா(26), காளியா(40), அமீர்(28), சர்தார்ஹீரு(36) ஆகிய 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 350 கிராம் வெள்ளிப் பொருட்களை மீட்டு, திருட பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களைக் கைப்பற்றினர்.

தொடர்ந்து, அவர்கள் 4 பேரையும் அரியலூர் கொண்டு வந்த தனிப் படையினர் சிமென்ட் ஆலைக் குடியிருப்பில் வீட்டில் திருடிய 80 பவுன் நகைகள் மற்றும் பொருட்கள் குறித்தும், வேறு திருட்டுச் சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனரா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

47 mins ago

க்ரைம்

53 mins ago

க்ரைம்

12 hours ago

க்ரைம்

13 hours ago

க்ரைம்

17 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

12 days ago

மேலும்