ஸ்ரீபெரும்புதூர்: குடிப்பதை தட்டிக் கேட்ட தந்தையை கொலை செய்த மகனை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் பாரதி நகர், ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் ராமு (45) இவர் அரசினர் மேல்நிலை பள்ளி அருகில் முடிதிருத்தகம் கடை நடத்தி வந்தார். இவரது மகன் தினேஷ். இந்நிலையில் தினேஷ் குடிபோதைக்கு அடிமையாகி சுற்றித் திரிந்து வந்துள்ளார். இதனால் அவரை குனப்படுத்துவதற்காக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மறுவாழ்வு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்ததும் மீண்டும் மதுவுக்கு அடிமையாகி அடிக்கடி பெற்றோரிடம் சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் தந்தைக்கும் மகனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த தினேஷ் தனது தந்தை ராமுவை கழுத்து பகுதியில் வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ராமு உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன் தினேஷைத் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
3 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago