திருப்பத்தூர் | மனைவி உயிரிழந்த துக்கம் தாளாமல் கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: ஜோலார்பேட்டை அருகே பரிதாபம்

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: உடல் நலக்குறைவால் மனைவி உயிரிழந்த சோகத் தில் கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த குனிச்சி பெரியார் வட்டத்தைச் சேர்ந்தவர் சித்தன். இவரது மகன் கட்டிட தொழிலாளி மேகநாதன்(24). இவர், பெரியகரம் சுண்ணாம்பு கல்லு பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகள் சங்கீதா(18) என்பவரை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், சங்கீதா வுக்கு கடந்த 22-ம் தேதி மாலை திடீரென வலிப்பு ஏற்பட்டது. உடனே, சங்கீதா திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி சங்கீதா உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவல், பெங்க ளூருவில் கட்டிட வேலை செய்து வந்த அவரது கணவர் மேகநாதனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டதும், அதிர்ச்சியடைந்த மேகநாதன் பெங்களூருவில் இருந்து திருப்பத்தூருக்கு வந்தார். மருத்துவமனையில் பிணவறையில் மனைவியின் உடல் வைக்கப்பட்டிருப்பதை அறிந்த மேகநாதன், மருத்துவ மனைக்கு செல்லாமல் மொள காரன்பட்டி ரயில் நிலையம் அருகே சென்றார்.

அப்போது ஜோலார் பேட்டையில் இருந்து சேலம் நோக்கி வந்த ரயில் முன் பாய்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந் ததும் ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் அங்கு சென்று மேகநாதனின் உடலை மீட்டு பிரதேப் பரிசோ தனைக்காக திருப்பத் தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

11 hours ago

க்ரைம்

12 hours ago

க்ரைம்

15 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்