கோவை மத்திய சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல்

By செய்திப்பிரிவு

கோவை: கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள், தண்ட னைக் கைதிகள், குண்டர் தடுப்புப் பிரிவு கைதிகள் என 1,600-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள தொலைபேசி எண்ணுக்கு நேற்று முன்தினம் மாலை ஓர்அழைப்பு வந்தது. பணியில் இருந்த போலீஸ்காரர் முத்துப்பாண்டி அழைப்பை எடுத்து பேசினார்.

மறுமுனையில் பேசிய நபர், சிறையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறி, போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதுகுறித்து, ரேஸ்கோர்ஸ் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் சிறைக்கு வந்து சோதனை செய்தனர். இதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது. இதுகுறித்து ஜெயிலர் சிவராஜன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்