கடலூர் மத்திய சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை

By செய்திப்பிரிவு

கடலூர்: விழுப்புரம் மாவட்டம் திருவெண் ணைநல்லூர் அருகே உள்ள, எடையார் பகுதியைச் சேர்ந்தவர், கலியபெருமாள் (43). கூலித் தொழிலாளியான இவர், தனது ரத்த உறவில் நெருக்கமான உள்ள 9-ம் வகுப்பு பயிலும் ஒரு சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்துள்ளார்.

இது குறித்து அறிந்த கலியபெருமாளின் மனைவி, விழுப்பு ரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கடந்த 24.12.2020 அன்றுகலியபெருமாளை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத் தனர்.

கலியபெருமாளின் மோசமான நடத்தையால்,சிறையில் இருந்த அவரைப் பார்க்க நண்பர்கள் மற்றும் உறவினர்கள் யாரும் வரவில்லை. மேலும், அவரை ஜாமீனில் எடுக்க யாரும் முயற்சி செய்யவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த கலியபெருமாள், நேற்று கடலூர் மத்திய சிறை வளாகத் தில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிறைக் காவலர்கள் கலிய பெருமாள் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலியபெருமாளின் மோசமான நடத்தையால், சிறையில் அவரைப் பார்க்க யாரும் வரவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

11 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்