ராணிப்பேட்டை: சென்னை வளசரவாக்கம் பகுதி யில் சொத்து பிரச்சினைக்காக தந்தையை கொடூரமாக கொலை செய்த மகன், தந்தையின் உடலை பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்து காவேரிப்பாக்கம் அருகே காலி வீட்டுமனையில் புதைத்தார். இதையடுத்து, உடல் புதைக்கப்பட்ட இடத்தில் வருவாய்த்துறையினர் முன்னிலையில் நேற்று தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் வசித்து வந்தவர் குமரேசன் (78). ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். இவருக்கு குணசேகரன் என்ற மகனும், காஞ்சனமாலா, யமுனா, பரிமளா ஆகிய 3 மகள்களும் உள்ளனர். கணவர் இறந்ததால் காஞ்சனாமாலா தனியாக இருக்கும் தந்தையுடன் வசித்து வந்தார். அதே வீட்டின் தரைத்தளத்தில் மகன் குணசேகரன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
சென்னை வளசரவாக்கத்தில் குமரேசனுக்கு செந்தமாக இருந்த சில வாடகை வீடுகள் மூலம் மாதம் ரூ.2.50 லட்சம் வாடகை கிடைத் துள்ளது. தனது ஓய்வூதியம் மற்றும் வாடகை பணத்தை வைத்து குமரேசன் தனது மகளுக்கே செலவு செய்து வந்துள்ளதால் மகன் குணசேகரன் தந்தை மீது கோபத்தில் இருந்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த 15-ம் தேதி காஞ்சனமாலா வீட்டில் இல்லாத நிலையில் குமரேசன் மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது, சொத்து பிரச்சினை தொடர்பாக தந்தையுடன் தகரா றில் ஈடுபட்ட குணசேகரன், அவரை கொடூரமாக கொலை செய்து பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்து அதன் மீது உப்பினை கொட்டி பதப்படுத்தி மறைத்து வைத்துள் ளார்.
பின்னர், ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே தஞ்சை நககரில் உள்ள காலி வீட்டுமனையை வாங்கியதுடன், அதன் உரிமையாளரான நில புரோக்கர் வெங்கடேசன் என்பவர் மூலம் ஆடு மேய்க்கும் தொழிலாளி பெருமாள் உதவியுடன் கடந்த 19-ம் தேதி பள்ளம் தோண்டி தந்தையின் உடல் இருந்த பிளாஸ்டிக் டிரம்மை புதைத்துள்ளார். அப்போது, தனக்கு வைக்கப்பட்ட சூனியத்தை மந்திரவாதி ஒருவர் பரிகார பூஜை செய்து அதை பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்துள்ளதாகவும், அதை புதிதாக வாங்கும் இடத்தில் புதைக்க வேண்டும் என்று கூறியதால் இங்கு புதைப்பதாக கூறியுள்ளார்.
இதற்கிடையில், வீட்டில் தனியாக இருந்த தந்தை காணாமல் போனது குறித்து வளசரவாக்கம் காவல் நிலை யத்தில் காஞ்சனமாலா புகார் அளித்தார். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் வீட்டின் பல இடங்களில் ஆங்காங்கே ரத்தக்கறை படிந்திருப்பதை கண்டுபிடித்தனர். விசாரணையை தீவிரப்படுத்தியபோது குண சேகரன் திடீரென மாயமானார். இதில், சந்தேகம் அடைந்த காவல் துறையினர் குணசேகரனின் மனைவியான வசந்தியிடம் விசா ரணை நடத்தியதில், கடந்த 18-ம் தேதி காவேரிப்பாக்கம் செல்வ தாக கூறிச்சென்ற கணவர் வீடு திரும்பவில்லை என்று கூறி யுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக காவேரிப்பாக்கம் காவல் துறை யினர் உதவியுடன் புரோக்கர் வெங்கடேசனை பிடித்து விசாரித்தபோது, பிளாஸ்டிக் டிரம் புதைக்கப்பட்ட விவரத்தை கூறினார். அந்த டிரம்மில் குமரேசன் உடல் இருப்பதையும் காவல் துறையினர் உறுதி செய்தனர். தொடர்ந்து, குமரேசன் உடல் இருந்த பிளாஸ்டிக் டிரம்மை எடுத்து வந்த சரக்கு வாகன ஓட்டுநர் திருமூர்த்தி மற்றும் ஆடு மேய்க்கும் தொழிலாளி பெருமாள் ஆகியோரையும் பிடித்தும் விசாரணை நடத்தினர். மேலும், குமரேசன் உடல் பிளாஸ்டிக் டிரம்மில் புதைக்கப்பட்ட இடத்தை நேற்று தோண்டிப்பார்த்தனர்.
நெமிலி வட்டாட்சியர் ரவி, வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் மகேந்திரன், தீபா மற்றும் வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் ஆபிரகாம் முன்னிலையில் நேற்று தோண் டப்பட்டது. அந்த இடத்தில் இருந்த பிளாஸ்டிக் டிரம்மை எடுத்து பார்த்ததில் குமரேசனின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவக் குழுவினர் இறந்த நபர் குமரேசன் என்பதற்காக டி.என்.ஏ சோதனைக்காக எலும்பு மாதிரி களையும் சேகரித்தனர். சொத்து தகராறில் பெற்ற தந்தையை கொடூரமாக கொலை செய்து உடலை பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்து மகனே புதைத்த சம்பவம் காவேரிப்பாக்கம் பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
2 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
14 days ago