மதுரை | காவலர் மனைவியிடம் 25 பவுன் நகை பறிப்பு: ஒருவர் சிக்கினார்; இருவர் தப்பியோட்டம்

By செய்திப்பிரிவு

மதுரையில் காவலர் மனைவியிடம் 25 பவுன் நகையை பறித்துச் சென்ற மூவரில் ஒருவர் சிக்கினார். இருவர் தப்பியோடி விட்டனர்.

அவனியாபுரம் அருகே மாநக ராட்சி காலனியைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம். தலைமைக் காவலராக உள்ளார். இவரது மனைவி முத்து (30). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் முத்து அணிந்திருந்த 25 பவுன் நகையை பறித்து விட்டு தப்பினர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு போலீஸாருக்கு தகவல் தெரி வித்தனர்.

அப்போது அவனியாபுரத்தி லிருந்து விமான நிலையம் செல்லும் சாலையில் அசுர வேகத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் எதிரே வந்த வாகனத்தின் மீது மோதி கீழே விழுந்தனர். அதில் சுதாரித்த 2 பேர் தப்பிச் சென்றனர். ஒருவர் மட்டும் காயமடைந்து தப்ப முடியவில்லை. பின்தொடர்ந்து வந்த அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் விமலா தலைமையிலான போலீஸார் அவரை பிடித்து விசாரித்தனர். அவர் மதுரை கிருஷ் ணமூர்த்தி மகன் ஆகாஷ் என்பது தெரியவந்தது. 25 பவுன் நகைகளுடன் தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

க்ரைம்

3 hours ago

க்ரைம்

6 hours ago

க்ரைம்

9 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

மேலும்