சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் சொத்து தகராறு காரணமாக தந்தையைக் கொன்ற மகன், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, டிரம்மில் கொண்டுபோய் புதைத்துள்ளார்.
வளசரவாக்கம் ஆற்காடு சாலை தாண்டவமூர்த்தி நகரை சேர்ந்த குமரேசன்(78). ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர். இவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.
வளசரவாக்கத்தில் உள்ள வீட்டின் முதல் தளத்தில் மகன் குணசேகரன் குடும்பத்துடனும், இரண்டாவது தளத்தில் குமரேசனும் வசித்து வந்தனர்.
கடந்த 19-ம் தேதி குமரேசனின் மூத்த மகள் காஞ்சனமாலா தந்தை வீட்டுக்கு வந்துள்ளார். அவரது அறை பூட்டி இருந்ததால், குணசேகரனிடம் விசாரித்துள்ளார்.
ஆனால், தந்தை எங்கு சென்றார் எனத் தெரியவில்லை என குணசேகரன் கூறியுள்ளார். பின்னர், இருவரும் வடபழனி முருகன் கோயில் பகுதியில் தந்தையைத் தேடியுள்ளனர். இதற்கிடையில், குணசேகரன் மாயமாகிவிட்டார்.
இதனால் சந்தேகமடைந்த காஞ்சனமாலா, உறவினர்கள் உதவியுடன் தந்தை தங்கியிருந்த வீட்டின் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது படுக்கையில் ரத்தக் கறை இருந்துள்ளது.
இது தொடர்பாக காஞ்சனமாலா அளித்த புகாரின் பேரில், வளசரவாக்கம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையில், தலைமறைவாக இருந்த குணசேகரனை, போலீஸார் தேடி வருகின்றனர்.
சொத்து தகராறில் தந்தையைக் கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி, பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்து, ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே குணசேகரன் குழிதோண்டி புதைத்துவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து, குமரேசன் புதைக்கப்பட்ட இடத்துக்கு நேற்று சென்ற போலீஸார், குணசேகரனுக்கு உதவியிருக்கலாம் எனக் கருதப்பட்ட வெங்கடேசன் என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
“ரியல் எஸ்டேட் தொழில் மூலம் குணசேகருடன் பழக்கம் ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன் என்னைத் தொடர்புகொண்ட குணசேகரன், புதிதாக டைல்ஸ் கடை வைக்க இடம் வேண்டும் என்று கேட்டார். எனக்குச் சொந்தமான இடத்தை வாங்கிக்கொள்ளும்படி நான் கூறினேன்.
இந்நிலையில், நேற்று முன்தினம் என்னைத் தொடர்புகொண்ட குணசேகரன், யாரோ சூனியம் வைத்துள்ளதாகவும், அதை மந்திரவாதி மூலம் எடுத்து, ஒரு டிரம்மில் அடைத்து வைத்துள்ளதாகவும், அந்த டிரம்மை தொழில் செய்யும் இடத்தில் புதைக்க வேண்டும் என்றும் கூறினார்.
பின்னர், காவேரிப்பாக்கத்துக்கு நேற்று முன்தினம் வந்த குணசேகரன், ஆடு மேய்க்கும் தொழிலாளி பெருமாள் மூலம் பள்ளம் தோண்டி, அந்த டிரம்மைப் புதைத்தார்” என்று வெங்கடேசன் தெரிவித்ததாக போலீஸார் கூறினர்.
இதையடுத்து, அந்த இடத்தைத் தோண்டி, குமரேசனின் சடலத்தை இன்று (மே 21) தோண்டியெடுக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
15 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago