புதுச்சேரி: புதுச்சேரி நகர பகுதியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண், இடையார்பாளையத்தில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றினார். அவர் கடந்த 11-ம் தேதி வீட்டில் விஷம் சாப்பிட்டு மயங்கி விழுந்து, ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பெண் ணின் தந்தை அளித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தினர். தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை அதேநிறுவனத்தில் பணியாற்றும் லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் (26) என்பவர் கடந்த 9 மாதங்களாக காதலித்து வந்ததும்,சில தினங்களுக்கு முன்பு விடுதிக்கு அழைத்துச் சென்று, யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து, அந்தப் பெண்ணுடன் பாலியல் செயல்பாட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இவை அனைத்தையும் மறைத்து, கடந்த 15-ம் தேதி கடலூர் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த வேறு பெண்ணை கணேஷ் திருமணம் செய்தது அம்பலமானது.
தற்கொலைக்கு முயன்ற பெண்ணிடம் வாக்குமூலத்தை பெற்ற போலீஸார், நம்பிக்கை மோசடி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் கணேஷை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
11 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago