புதுச்சேரி | ஓட்டுநரை கத்தியால் வெட்டி செல்போன் பறித்த 6 பேர் கைது

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: திருச்சி துறையூர் கோணபாதை பகுதியைச் சேர்ந்தவர் விஜய குமார் (45), லாரி ஓட்டுநர். சில மாதங்களுக்கு முன்பு இவர் புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டைக்கு லாரியில் லோடு ஏற்றி வந்தார்.

அப்போது 3 பைக்குகளில் வந்த 6 இளைஞர்கள் விஜயகுமா ரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறிக்க முயன்றனர். அவர் தர மறுத்ததால் கத்தியால் வெட்டிவிட்டு செல்போனை பறித்துச் சென்றனர். காயமடைந்தஅவர் அருகிலுள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து அவர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித் ததில், வழிப்பறியில் ஈடுபட்டது புதுச்சேரி திலாசுப்பேட்டை வீமன் நகர் முகேஷ் கண்ணன் (23), அருள்குமார் (19), சுரேந்தர்(19), தமிழரசன் (21), அஜித் (23), மாதவன் (21) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீஸார் தேடிவந்த நிலையில், நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜ் தலை மையில் போலீஸார் அங்குள்ள கால்நடை மருத்துவமனை அருகே வாகன சோதனை நடத்தியபோது முகேஷ் கண்ணன் உள்ளிட்ட 6 பேரும் சிக்கினர். இதையடுத்து அவர்களை கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

செல்போன் பறிப்பு

வில்லியனூர் அருகே கோபா லன்கடை அம்மா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி (28). மெடிக்கல் ரெப்பாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவுஇவர் தனது வீட்டின் முன்புநின்று செல்போனில் பேசிக்கொண் டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் மணியை கத்தியால் வெட்டிஅவரிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்றது.

இதுகுறித்த புகாரின்பேரில் வில்லியனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் அதேபகுதியைச் சேர்ந்த சதீஷ் (20), குமார் (எ) கலைகுமார் (22), ஜெயபிரகாஷ் (22) மற்றும் இரண்டு நபர்கள் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீஸார் அவர்களை தேடி வருகின்றனர்.

வாகன சோதனை நடத்தியபோது முகேஷ் கண்ணன் உள்ளிட்ட 6 பேரும் சிக்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

14 days ago

மேலும்