திருச்சி: திருச்சி மேலகல்கண்டார் கோட்டை திருமலை நகரைச் சேர்ந்தவர் சிவகுமார்(33). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர் கடந்த 5-ம் தேதி சென்னையில் இருந்து பேருந்தில் திருச்சி வந்தார். டிவிஎஸ் டோல்கேட்டில் இறங்கி அணுகு சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக காரில் வந்த 3 பேர் சிவகுமாரிடம் கத்தியைக்காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.1 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பியோடினர். இதுகுறித்து கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், சிவகுமாரிடம் வழிப்பறி செய்ததாக திருநெல்வேலியைச் சேர்ந்த சங்குப்பாண்டி மகன் இசக்கிராஜா(27) என்பவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற இருவரை தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
8 hours ago
க்ரைம்
9 hours ago
க்ரைம்
13 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago