தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 100 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் மூலம் மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை குண்டர் தடுப்புச் சட்டத் தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-ஆக அதிகரித்துள்ளது.

தூத்துக்குடி பூபால்ராயர்புரம் பகுதியை சேர்ந்த சகாய வினோத் (38) என்பவரை மனைவியை கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி வடபாகம் போலீஸார் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி கைது செய்தனர். இதுபோல் ஆறுமுகநேரி வடக்கு காமராஜபுரம் பகுதியை சேர்ந்த முருகன் (47), யோவான் மகன் ஜெபராஜ் (27) ஆகிய இருவரையும் கொலை மிரட்டல் வழக்கில் கடந்த 5-ம் தேதி ஆறுமுகநேரி போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் அளித்த பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உத்தரவிட்டார். அதன்பேரில் சகாய வினோத், முருகன், ஜெபராஜ் ஆகிய 3 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 23 பேர் உட்பட 100 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த மாதத்தில் மட்டும் 30 பேர் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

12 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

மேலும்