தூத்துக்குடி: தூத்துக்குடி அருகேயுள்ள முத்தையாபுரம் பகுதியில் உள்ளதிருமண மண்டபத்தில் கடந்த 7-ம் தேதி திருமண விழா நடைபெற்றது. அப்போது மணமகள் அறையில் இருந்த 10 பவுன் நகைகள் காணாமல் போயுள்ளன.
முத்தையாபுரம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதே பகுதியைச் சேர்ந்த சுமதி (42) என்றபெண்ணை இரவு 10 மணிக்கு மேல் காவல்நிலையம் அழைத்துச்சென்று போலீஸார் விசாரித்துஉள்ளனர். அதன்பின் காயங்களுடன் சுமதி தூத்துக்குடி அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
பெண் காவலர்கள் தன்னை அடித்து துன்புறுத்தியதாக மாவட்ட எஸ்பியிடம் சுமதி புகார் அளித்தார். எஸ்பி பாலாஜி சரவணன்விசாரணை நடத்த உத்தரவிட்டதில் சுமதியை, பெண் காவலர்கள் துன்புறுத்தியதும், வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் இரவு 10 மணிக்கு மேல் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியதும் தெரியவந்தது.
இந்நிலையில், முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துமாலை, பெண் தலைமைக் காவலர் மேக்சினா, பெண் காவலர்கள் உமா மகேஸ்வரி, கல்பனா ஆகிய 4 பேரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார். தனிப்பிரிவு காவலர் முருகன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
இதுகுறித்து, எஸ்பி கூறும்போது, “முத்தையாபுரம் காவல் நிலையத்தில் பெண்ணை துன்புறுத்தியது தெரியவந்தது. எப்ஐஆர் அல்லது சிஎஸ்ஆர் பதிவு செய்யாமல் அவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திஉள்ளனர். 4 பேரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்” என்றார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
14 hours ago
க்ரைம்
16 hours ago
க்ரைம்
16 hours ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago