சிறுமுகை அருகே தலைமைக் காவலர் தற்கொலை

By செய்திப்பிரிவு

கோவை: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகாவைச் சேர்ந்தவர் தாமோதரன்(41). இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். காரமடை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றிய தாமோதரன், சிறுமுகை அருகேயுள்ள ஜடையம்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த மார்ச் 10-ம் தேதி முதல் மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த மாதம் 23-ம் தேதி தகராறு ஏற்பட்டதில் தாமோதரனின் மனைவி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு சொந்த ஊரான விருதுநகருக்கு சென்று விட்டார்.

இதனால் மனமுடைந்த தாமோதரன், கடந்த 16-ம் தேதி ஜடையம்பாளையத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்தது நேற்று தான் தெரியவந்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற சிறுமுகை போலீஸார், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

5 hours ago

க்ரைம்

6 hours ago

க்ரைம்

10 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்