கோவை: சேலம் மாவட்டம், மல்லூரைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர், பாவை அம்மன் ஃபைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனத்தில் பணம் கட்டினால் அதிக வட்டி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி மொத்தம் 28 பேர் ரூ.5.09 கோடி பணத்தை செலுத்தியுள்ளனர். ஆனால், வாக்குறுதி அளித்தபடி கட்டிய பணத்தையும், வட்டியையும் அளிக்கவில்லை.
இதில் பாதிக்கப்பட்ட, ஓய்வு பெற்ற பேராசிரியர் பழனியப்பன் சேலம் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
போலீஸார் விசாரணையில், மோசடி உறுதியானதை யடுத்து, நிதி நிறுவனத்தின் உரிமையாளர் மாணிக்கம், மேலாளர் முருகேசன், உதவியாளர் சாந்தி ஆகிய மூவரும் 2012 மார்ச் 28-ம் தேதி கைது செய்யப்பட்டனர். பின்னர், இந்த வழக்கு சேலம் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் நிதி நிறுவனத்தின் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு பல்வேறு இடங்களில் சொத்துகளை வாங்கியதும், சொந்த பயன்பாட்டுக்காக அந்த பணத்தை பயன்படுத்தியதும் தெரியவந்தது.
வழக்கு விசாரணை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே நிதி நிறுவனத்தின் உரிமை யாளரான மாணிக்கம் கடந்த 2016 அக்டோபரில் உயிரிழந்தார்.
விசாரணை முடிவடைந்த நிலையில், நிறுவனத்தின் மேலாளரான முருகேசனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1.96 கோடி அபராதம் விதித்தும், அபராதத்தில் ரூ.1.90 கோடியை முதலீட்டாளர்களுக்கு பிரித்து அளிக்க வேண்டும் எனவும், வழக்கிலிருந்து சாந்தியை விடுவித்தும் நீதிபதி ஏ.எஸ்.ரவி நேற்று உத்தர விட்டார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
17 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago