ஒகேனக்கல் | பாறை விளிம்பில் நின்று செல்ஃபி எடுத்தபோது ஆற்றில் தவறிவிழுந்த பெண் உயிரிழப்பு

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலிலில் 'செஃல்பி' எடுத்தபோது காவிரி ஆற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் எட்டிக்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (40). இவர் மனைவி சுமதி (35). இந்த தம்பதியருக்கு 8 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. ஆறுமுகம் பென்னாகரம் பகுதியில் பெயின்ட் கடை நடத்தி வருகிறார். இவர்கள் குடும்பத்துடன் ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். ஒகேனக்கலில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த பின்னர் பரிசலில் பயணித்து காவிரி ஆற்றின் அழகை ரசித்துள்ளனர்.

‘ஐவர் பாணி’ என்று அழைக்கப்படும் ஐந்தருவி அருகே காட்சிக் கோபுரம் அமைந்துள்ள பகுதியில் பரிசலில் இருந்து பாறைகளில் இறங்கி நின்று ஆழமான பகுதியில் பயணிக்கும் காவிரி ஆற்றை அவர்கள் வேடிக்கை பார்த்துள்ளனர். அப்போது, பாறை ஒன்றின் ஓரப்பகுதிக்கு சென்ற சுமதி தனது செல்போன் மூலம் ‘செஃல்பி’ எடுக்க முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக சுமதி ஆற்றில் தவறி விழுந்துள்ளார். இதைக் கண்டதும் அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆற்றில் குதித்து சுமதியை மீட்டுள்ளனர். உயரமான பகுதியில் இருந்து விழுந்ததால் சுமதிக்கு பலத்த அடிபட்டு மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே அவரை ஒகேனக்கல் அடுத்த ஊட்டமலையில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே சுமதி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஒகேனக்கல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

13 hours ago

க்ரைம்

15 hours ago

க்ரைம்

15 hours ago

க்ரைம்

18 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்