சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

By செய்திப்பிரிவு

திருப்பூர்: 3 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில், திருப்பூர் கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது.

திருப்பூர் பழவஞ்சிபாளையத்தை சேர்ந்தவர் கதிரேசன் (46). கூலித் தொழிலாளி. கடந்த ஆண்டு சகோதரிகளான இரு சிறுமிகள் மற்றும் மற்றொரு சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். இது தொடர்பாக இரு சிறுமிகளின் பெற்றோர், திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிந்து கதிரேசனை கைது செய்தனர்.

இந்த வழக்கு திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.நாகராஜன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், 3 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த கதிரேசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், ரூ. 12 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து கதிரேசன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பி.ஜமிலாபானு ஆஜரானார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

17 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்