மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்குள் மோதல்: 4 பேருக்கு காயம்

By செய்திப்பிரிவு

மதுரை: மதுரை மத்திய சிறையில் விசாரணை மற்றும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவோர் ஒரே பகுதியில் அடைக்கப்படுவது வழக்கம். இவர்களுக்குள் சாப்பிடும் இடம், தூங்குமிடங்களில் அடிக்கடி மோதல் போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. மேலும் கைதிகள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை போன்ற முயற்சியில் ஈடுபடுவதும் நடைபெறுகிறது. இது மாதிரியான செயல்களைத் தடுக்க, சிறைத்துறை அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனாலும் கைதிகளுக்குள் பிரச்சினை, தகராறு தொடர்வது அச்சத்தை ஏற்படுத்துகிறது என கைதிகளின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிறை வளாகத்துக்குள் விசாரணை கைதி ஒருவருக்கும், குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள 3 பேருக்கும் இடையே தூங்குவதற்கான இடம் பிடிப்பதிலும், படுக்கை விரிப்பதிலும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் லேசான காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக கரிமேடு காவல் நிலையத்தில் சிறை நிர்வாகம் புகார் அளித்துள்ளது. அதன்பேரில் போலீஸார் விசாரிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை கைதி மண்டை தினேஷ் , குண்டர் தடுப்பு காவல் கைதிகள் பிரகாஷ், நிதிஷ்குமார் மீது கரிமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

7 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

மேலும்