புதுச்சேரி: புதுச்சேரியில் 5 வயது மகளுக்குபாலியல் தொல்லை கொடுத்ததந்தையை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
புதுச்சேரி நகரப் பகுதியைச்சேர்ந்தவர் சதீஷ்பெரியன் (32), ஓட்டுநர். திருமணமாகி மனைவி, 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தம்பதிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரது மனைவி குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனிடையே அவர், 17 வயதுள்ள சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கினார்.
இதுகுறித்த புகாரின் பேரில்ரெட்டியார்பாளையம் போலீஸார் சதீஷ்பெரியனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில்அடைத்தனர். கடந்த சில மாதங் களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளியே வந்த அவர், தனது குழந்தையை அழைத்துக் கொண்டுஉறவினர் வீட்டில் வசித்தார். சில நாட்களுக்குப் பிறகு குழந் தையை தாய் அழைத்துச் சென்ற நிலையில், குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து மருத்துவம னைக்கு அழைத்துச் சென்று பார்த்தபோது, தந்தையே குழந் தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் கிருமாம்பாக்கம் போலீஸார் ஏப்ரல் 14-ம் தேதி போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து, தலைமறைவான சதீஷ் பெரியனை தேடி வந்தனர்.
இதற்கிடையில் போலீஸார் தேடுவதை அறிந்த அவர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்று புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து வெளியே வந்த அவரை போலீஸார், நேற்று முன் தினம் இரவு கைது செய்தனர்.
விஷமருந்தி தற்கொலைக்கு முயன்று புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
9 mins ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
14 days ago