பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன்(58). இவர், நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது, நள்ளிரவு 2.30 மணியளவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி மற்றும் கையுறைகள் அணிந்த 5 பேர், வீட்டின் கீழ் அறையில் தூங்கிக்கொண்டிருந்த பாண்டியனை இரும்புக் கம்பியால் தாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி, நகை, பணம் இருக்கும் இடம் குறித்து கேட்டுள்ளனர்.
பின்னர், வீட்டிலிருந்த நான்கரை பவுன் நகை, ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். முன்னதாக, இவ்வளவு பெரிய வீட்டில் பணம் இல்லையா எனக் கேட்டு பாண்டியனை தாக்கிய கொள்ளையர்கள், பின்னர் அவரின் செலவுக்காக ரூ.100 கொடுத்துவிட்டுச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
15 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago