விருத்தாசலம்: பெரம்பலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் - அனிதா தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அனிதா கர்ப்பம் தரித்தார். கர்ப்பத்தின் பாலினத்தை அறிவதற்காக இத்தம்பதி கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள கச்சிமைலூர் கிராமத்தைச் சேர்ந்த சீத்தாராமன் மகன் முருகன் (50) நடத்தும் மருந்தகத்துக்கு சென்றுள்ளனர்.
அங்கு மறைமுகமாக ஸ்கேன் மையம் ஒன்றை வைத்து முருகன் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு சென்று சோதனை செய்தபோது கருவில் இருப்பது பெண் பாலினம் என அறிந்ததாகவும், அதனால் கருக்கலைப்பு செய்ய வேல்முருகன், முருகனிடம் கேட்டுகொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கடந்த 5-ம் தேதி மருந்தகத்தில் அனிதாவுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டு உள்ளது. பின்னர் அன்றே வீடு திரும்பிய அனிதாவுக்கு அதீத ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் அவர்கள் ராமநத்ததில் உள்ள மருந்தகத்துக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து மருந்தக உரிமையாளர் முருகன் காரில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனிதாவை அழைத்துச் சென்று, அவசர சிகிச்சை பிரிவில் நேற்று முன்தினம் அனுமதித்துள்ளனர். அதன் பின்னர் மருந்தக உரிமையாளர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். பின்னர் மருத்துவர்கள் அனிதாவை பரிசோதித்தபோது, அனிதா உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வேல்முருகன் அளித்த புகாரின் பேரில், ராமநத்தம் போலீஸார் வழக்குப்பதிவு முருகனை தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
22 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago