விழுப்புரம் | பாலியல் சீண்டல் வழக்கு விவகாரம் - பள்ளி ஆசிரியர் பணியிட மாற்றம்

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

விழுப்புரம் அருகே நன்னாட்டாம்பாளையத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராகபணியாற்றும் சாலையாம்பாளை யத்தைச் சேர்ந்த பாபு (48), மாணவிகளிடம் பாலியல் சீண்ட லில் ஈடுபடுவதாக, மாணவிகளின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் ஆசிரியர் பாபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே ஆசிரியர் பாபுவை பணியிடை நீக்கம் செய்துமாவட்டக் கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி கடந்த புதன்கிழமை உத்தரவிட்டார்.

இந்நிலையில் ஆசிரியர் பாபு நன்னாட்டாம்பாளையம் ஆரம்பப்பள்ளியில் இருந்து கண்டமானடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு இடமாற்றம் செய்து விழுப்புரம் மாவட்டக் கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

முதல்நாள் தற்காலிக பணி நீக்கம் என்கிறார்கள், மறுநாள் பணியிட மாற்றம் என்கிறார்கள்.

இதுபற்றி கல்வித்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, "புகார் சொன்ன மாணவிகளிடம் தனித்தனியே விசாரித்தபோது, பாலியல் சீண்டல் ஏதும் இல்லை. மாணவிகளுக்கு பேட் டச் எது, குட் டச் எது எனத் தெரியவில்லை. அதில் ஏற்பட்ட குழப்பமே இப்பிரச்சினைக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது. ஆனாலும், ஆசிரியர் பாபு மீது புகார் எழுந்ததால் இனியும் அதே பள்ளியில் பணியாற்றக்கூடாது என்பதால் வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்" என்றனர்.

மாணவிகளுக்கு பேட் டச் எது, குட் டச் எது எனத்தெரியவில்லை. அதில் ஏற்பட்ட குழப்பமே இப்பிரச்சினைக்கு காரணம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE