கஞ்சா வியாபாரியுடன் தொடர்பில் இருந்த 4 போலீஸ் இடமாற்றம்

By செய்திப்பிரிவு

தேனி: தேனி அருகே கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த காவல் ஆய்வாளர் மற்றும் 3 காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அல்லிநகரம் காவல் ஆய்வாளர் ராஜேஷ்கண்ணன், காவலர்கள் ராஜா, ஸ்ரீதர், வாலிராஜன் ஆகியோர் கஞ்சா வியாபாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாக எஸ்பிக்கு புகார் சென்றது. அவர்கள் மூவரும் கண்காணிக்கப்பட்டனர். இதில் கஞ்சா விற்பனைக்கு இவர்கள் துணையாக இருந்ததும், பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில் கஞ்சா வியாபாரியான ஈஸ்வரன் என்பரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் தேனி கட்டுப்பாட்டு அறைக்கும், 3 போலீஸாரை ஆயுதப்படை பிரிவுக்கும் மாற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

14 days ago

க்ரைம்

14 days ago

மேலும்