கோவில்பட்டி: கோவில்பட்டி ஊருணித் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் துரைபாண்டி (35). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு விஜயலட்சுமி என்றமனைவியும், 2 மகள்களும் உள்ளனர். நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு துரைபாண்டி, ஆறுமுகப்பாண்டி என்பவருடன் வெளியே செல்கிறேன் எனக் கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர், மாலை 5 மணிக்கு விஜயலட்சுமி, துரைபாண்டியை செல்போனில் தொடர்பு கொண்ட போது, வீட்டுக்கு பிறகு வருகிறேன் எனக் கூறியுள்ளார். ஆனால், அவர் வீட்டுக்கு வரவில்லை.
பின்னர், கயத்தாறு தளவாய்புரம் - வாகைகுளம் சாலையில் காலில்அடிபட்ட நிலையில் துரைபாண்டி கிடப்பதாகவும், அவரை சிகிச்சைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் போலீஸார் விஜயலட்சுமிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், துரைபாண்டி, விஜயலட்சுமியிடம் காப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்த மகாராஜன், ராஜாராம்,மனோஜ், கோவில்பட்டியைச் சேர்ந்த ஜானகிராமன், சின்னத்துரை,திருமங்கலக்குறிச்சியைச் சேர்ந்தமுருகன், சவலாப்பேரியைச் சேர்ந்தபூல்பாண்டி ஆகிய 7 பேர் தளவாய்புரத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடைக்குச் செல்லும் வாகைகுளம் சாலையில் வைத்து தன்னைவிறகு கம்பால் சரமாரியாக தாக்கியதாக கூறியுள்ளார். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த துரைப்பாண்டி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.கயத்தாறு போலீஸார் விசாரணைநடத்தினர். ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக ஏற்பட்ட மோதலில்இக்கொலை நடந்திருப்பது தெரியவந்தது. கொலையில் தொடர்புடைய வெ.மகாராஜன் (40),ரா.ராஜாராம் (38), மனோஜ் (23), பா.ஜானகிராமன் (32), ந.சின்னத்துரை (37) ஆகிய 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
14 days ago
க்ரைம்
14 days ago