கோவை: மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ராம் தீபிகா, கடந்த 24-ம் தேதி பணி முடித்து பகல் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். காரமடையில் தனியார் மண்டபம் அருகே சென்றபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் அவர் அணிந்திருந்த தங்க தாலி மற்றும் இரு தங்க சங்கிலிகள் என பதினான்கரை பவுன் நகைகளை பறித்துச் சென்றனர். புகாரின்பேரில் காரமடை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
தொடர் விசாரணையில், விருதுநகர் கோவில் புலிக்குத்தி கிராமத்தை சேர்ந்த என்.ரஞ்சித்குமார் (22), என்.அஜித்குமார்(21), கோவை சிட்ரா அருகேயுள்ள குமாரசாமி நகரைச் சேர்ந்த எம்.அபிஷேக்குமார் (24) ஆகியோருக்கு இதில் தொடர்பிருப்பதும், புதுக்கோட்டை மாவட்டம் கோனார்பட்டு கிராமத்தில் அவர்கள் பதுங்கியிருப்பதும் தெரியவந்தது. அங்கு சென்ற தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் அவர்களைப் பிடித்து கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்போரில் சிவகங்கை மாவட்டம் ஆத்தங்குடியில் உள்ள வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை மீட்டனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 hour ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago