ஈரோடு: சென்னிமலை அருகே விவசாயியைக் கொலை செய்து, 15 பவுன் நகையைக் கொள்ளையடுத்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த உப்பிலிபாளையம் குட்டக்காட்டு புதூரைச் சேர்ந்தவர் துரைசாமி (65). விவசாயி. இவரது மனைவி ஜெயமணி (62). மகள் மற்றும் மகனுக்கு திருமணமான நிலையில் இவர்கள் மட்டும் தனியாக வசித்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்தபோது மர்மநபர்கள், துரைசாமியை கூர்மையான ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்துள்ளனர். ஜெயமணியின் கழுத்தில் கத்தியால் காயம் ஏற்படுத்திய அவர்கள், தாலிக்கொடி மற்றும் வீட்டிலிருந்த 15 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பினர்.
நேற்று அதிகாலை பால்காரர் வந்தபோது, துரைசாமி கொலை செய்யப்பட்டிருப்பதும், ஜெயமணி காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பதும் தெரியவந்தது. அருகில் இருந்தோர் ஜெயமணியை மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஈரோடு எஸ்பி சசிமோகன் மற்றும் சென்னிமலை போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். துப்பறியும் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களும் தடயங்களைச் சேகரித்தனர். சென்னிமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
6 தனிப்படை தீவிரம்-டிஐஜி முத்துசாமி
இதனிடையே கோவை சரக டிஐஜி முத்துசாமி சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது;
விவசாயி கொலையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க டிஎஸ்பி பாலாஜி தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளில், ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களது விவரங்களை நிறுவனங்களிலிருந்து அந்தந்த பகுதி காவல் நிலையங்கள் மூலம் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
வடமாநில தொழிலாளர்களின் தகவல்களை சேகரிக்க தனியாக ஒரு மென்பொருள் உருவாக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. இதன்மூலம் வடமாநிலத் தொழிலாளர்கள் யாராவது குற்றச்செயலில் ஈடுபட்டால், உடனடியாக அவர்களது விவரத்தைக் கண்டறிய முடியும்.
ஈரோடு மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 100 கிலோவுக்கு மேல் கஞ்சா பிடிபட்டுள்ளது. வடமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் கஞ்சா கடத்தி வரப்படுகிறதா என போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர், என்றார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
4 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago