திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே குடும்ப பிரச்சினையில் கிணற்றில் குதித்த தாய் மற்றும் சிறுமி மீட்கப்பட்ட நிலையில், 7 மாத ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அடுத்த எடப்பாளையம் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் 2 குழந்தைகளுடன் பெண் ஒருவர் நேற்று முன் தினம் இரவு குதித்துள்ளார். இதையறிந்த கிராம மக்கள், கிணற்றில் இருந்து பெண் மற்றும் 4 வயது சிறுமியை மீட்டனர். அதேநேரத்தில் 7 மாத ஆண் குழந்தையை மீட்க முடியவில்லை. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத் துறையினர், 7 மாத ஆண் குழந்தை ஸ்ரீதரை உயிரிழந்த நிலையில் மீட்டனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட பெண்ணிடம், திருவண்ணாமலை கிழக்கு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அந்த பெண்ணின் பெயர் கமலா(30) என்பதும், அவரது கணவர் பெயர் ஏழுமலை என்பதும், குடும்ப பிரச்சினை காரணமாக 4 வயது மகள் மற்றும் 7 மாதக் குழந்தையுடன் கிணற்றில் குதித்துள்ளதும், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
16 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago