இளம் பெண்ணை கடத்தி திருமணம்; நண்பர்கள் 3 பேர் கைது: கார் பறிமுதல்

By செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூர் குமரானந்தபுரத்தைச் சேர்ந்தவர் உமாஸ்ரீ (23). முதுகலை பட்டதாரி. அவிநாசியை சேர்ந்தவர் மோகன் (26). இவர் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றுபவர். இந்நிலையில், உமாஸ்ரீ தனது இருசக்கர வாகனத்தில் காதர் லே-அவுட் பகுதியில் நேற்று முன்தினம் வந்துகொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த மோகன் மற்றும் அவரது நண்பர்கள், உமாஸ்ரீயை கடத்தினர். அவரது அலறல் சத்தத்தை கேட்ட அப்பகுதியினர், வடக்கு போலீஸாருக்கு தகவல் அளித்தனர். மேலும், உமாஸ்ரீயின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் கடத்தல் வழக்கு பதிந்தனர்.

இதையடுத்து அவிநாசியில் வைத்து மோகனின் நண்பர்களான மதன் (24), கார்த்தி (22), பிரசாந்த் (24) ஆகியோரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். திருமணமான மோகன், உமாஸ்ரீ ஆகியோரை அழைத்து வந்து திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

14 days ago

க்ரைம்

14 days ago

மேலும்