போச்சம்பள்ளி | பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து நூதன முறையில் திருடப்பட்ட ரூ.4.29 லட்சம் மீட்பு

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து நூதன முறையில் திருடப்பட்ட ரூ.4.29 லட்சத்தை சைபர் கிரைம் போலீஸார் மீட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கொல்லக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் உமாமகேஸ்வரி. இவர் வங்கியில் பான் கார்டு பெறுவதற்காக விண்ணப்பம் செய்திருந்தார். இதையடுத்து வங்கியில் இருந்து அலுவலர் பேசுவதாக கூறிய மர்ம நபர், பான் கார்டு பெறுவதற்காக சில விவரங்கள் தேவைப்படுகிறது என கூறியுள்ளார். பின்னர், உமா மகேஸ்வரியின் செல்போன் எண்ணிற்கு வந்த ஓடிபி எண்ணைப் பெற்று, அதன் மூலம் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.4 லட்சத்து 58 ஆயிரத்து 275-யை நூதன முறையில் திருடினார்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உமாமகேஸ்வரி புகார் அளித்தார். சைபர் கிரைம் பிரிவு ஏடிஎஸ்பி சங்கு மேற்பார்வையில் ஆய்வாளர் காந்திமதி, எஸ்ஐ (தொழில்நுட்பம்) அருண்நேரு ஆகியோர் பணத்தை மீட்க முயற்சி மேற்கொண்டனர். அதன்படி நூதன முறையில் திருடப்பட்ட பணத்தில் ரூ.4.29 லட்சத்தை மீட்ட போலீஸார், உமா மகேஸ் வரியிடம் வழங்கினர்.

இதுதொடர்பாக ஏடிஎஸ்பி கூறும்போது, அறிமுகம் இல்லாத நபர்கள் போன் மூலம் தொடர்பு கொண்டு வங்கிக் கணக்கு விவரங் களை கேட்டால் கொடுக்கக்கூடாது. அதற்கான லிங்க் ஏதும் வந்தால் அதை தொடாமல் தவிர்க்க வேண்டும். தவறுதலாக மேற்காணும் வழிகளில் பணத்தை இழந்தால் உடனடியாக 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

14 days ago

க்ரைம்

14 days ago

மேலும்