கரூர்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள பி.உடையாபட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர் (29). ஓட்டுநர். இவர் கடந்தாண்டு ஜூலை 24-ம் தேதி ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன் கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ, கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து பிரான்சிஸ் சேவியரை கைது செய்தனர்.
கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் நீதிபதி நசீமா பானு நேற்று தீர்ப்பு வழங்கினார். பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக பிரான்சிஸ் சேவியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம், அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம், இவ்விரு அபராதங்களை கட்டத்தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை, கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம், அதனை கட்டத்தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை விதித்ததுடன், இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு 3 மாதங்களுக்குள் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
14 days ago
க்ரைம்
14 days ago