ஈரோடு: தனக்குச் சொந்தமான நிலத்தைப் பெற்றுக் கொண்டு, தன்னை பராமரிக்க மறுக்கும் மகன் மீது நடவடிக்கை எடுத்து, நிலத்தை பெற்றுத் தர வேண்டுமென ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலரிடம் தாய் புகார் அளித்தார்.
ஈரோடு மாவட்டம் அத்தாணி பகுதியைச் சேர்ந்த கண்ணம்மாள் (80) என்பவர், மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்த மனு விவரம்;
எனக்கு குணசேகர் என்ற மகனும், கவிதா என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு சத்தியமங்கலத்தில் திருமணமாகி அவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகன் குணசேகருக்கு திருமணமாகி பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 2006-ம் ஆண்டு எனது கணவர் இறந்து விட்டார். எனது இறுதி காலத்தில், என் மகன் என்னை கவனித்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில், அந்தியூர் வரட்டுப்பள்ளம் பகுதியில் இருந்த எனது விவசாய நிலத்தை, என் மகனுக்கு எழுதி கொடுத்தேன்.
இந்நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக எனது மகனின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டு, என்னை சரியாக கவனித்துக் கொள்ளாததோடு, சாப்பாடு, மருந்துச் செலவிற்கு கூட பணம் தருவதில்லை. தற்போது நான் வசிக்கும் வீட்டில் இருந்தும் என்னை வெளியேறச் சொல்கிறார். இதுதொடர்பாக கோபி கோட்டாட்சியரிடம் புகார் அளித்தேன். எனது மகனை அழைத்து விசாரித்த அதிகாரி, ‘உன் அம்மா அந்த வீட்டில்தான் வாழ்நாள் இறுதிவரை இருப்பார். அவருக்கு உணவு, மருத்துவம் செலவுக்காக மாதம் ரூ.5000 கொடுக்க வேண்டும்’ என்று அறிவுரை கூறினார்.
ஆனால், என் மகன் அதன்படி கொடுக்கவில்லை. நான் இறுதி காலத்தில் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழும் வகையில், என் மகன் மீது நான் எழுதிக் கொடுத்த பத்திரத்தை ரத்து செய்து எனது சொத்தை என்னிடம் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
15 hours ago
க்ரைம்
17 hours ago
க்ரைம்
17 hours ago
க்ரைம்
20 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago