விழுப்புரம் | மாணவிகளிடம் பாலியல் சீண்டல் - ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: வளவனூர் அருகே பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அருகே உள்ள நன்னாட்டாம்பாளையம் கிராமத்தில் அரசு நிதி உதவி பெறும் ஆரம்பப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் 3 மற்றும் 4-ம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வரும் பாபு என்பவர் அடிக்கடி சில மாணவிகளிடம் பாலியல் சீ்ண்டலில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாணவிகள், தங்கள் பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம், அப் பள்ளியை முற்றுகையிட்டனர்.

ஆத்திரமடைந்த பொதுமக்களில் சிலர் ஆசிரியரை தாக்கியுள்ளனர். பின்னர் இச்சம்பவம் குறித்து மாணவிகளின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீஸார் , விழுப்புரம் அருகே சாலையாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் பாபு (48) மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

12 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்