மதுரை: திருச்சி நகைக்கடையில் ரூ.13 கோடி மதிப்பிலான ஆபரணக் கொள்ளை வழக்கில் சிறையிலுள்ள நபருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி லலிதா ஜுவல்லரியில் கடந்த 2019-ல் சுவரில் துளை போட்டு ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில் முருகன், சுரேஷ், கனகவல்லி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுரேஷ் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, இந்த வழக்கின் விசாசரணை 3 ஆண்டுகளாக முடியாமல் உள்ளது. இதனால் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் வழக்கு முடியும் வரை தினமும் விசாரணை நீதிமன்றத்திலும், புதன், சனி கிழமைகளில் காவல் நிலையத்திலும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
3 mins ago
க்ரைம்
1 hour ago
க்ரைம்
6 hours ago
க்ரைம்
7 hours ago
க்ரைம்
12 hours ago
க்ரைம்
12 hours ago
க்ரைம்
20 hours ago
க்ரைம்
20 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago