திருச்சி: திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகேயுள்ள அதவத்தூர் மேலத் தெருவைச் சேர்ந்தவர் ரெங்கராஜ்(47). கட்டுமான தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா. மகன் பார்த்தசாரதி(19). குடிப்பழக்கம் உள்ள ரெங்கராஜ் தினமும் மது அருந்திவிட்டு வந்து குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மேலும், மல்லிகாவை அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ரெங்கராஜ் இதேபோல தகராறு செய்ததால், ஆத்திரமடைந்த பார்த்தசாரதி, தேங்காய் உரிக்கும் கடப்பாறையால் ரெங்கராஜின் தலையில் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த ரெங்கராஜ், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து பார்த்தசாரதியை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
22 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago