தஞ்சை | தெரு நாய்களை அடித்து கொன்ற இருவர் நீதிமன்றத்தில் சரண்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே தெரு நாய்களை அடித்து கொன்ற 2 பேர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.

தஞ்சாவூர் அருகே திருமலை சமுத்திரத்தில் தனியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு நடந்து வரும் கட்டிடப் பணிகளில் சென்ட்ரிங் வேலை பார்க்கும் குமார்(38), மனோகர்(52) மற்றும் இருவர் சேர்ந்து அப்பகுதியில் சுற்றித்திரிந்த 2 தெருநாய்களை அடித்து கொன்று புதைத்துள்ளனர்.

இதுகுறித்த வீடியோ ஒன்று வெளியான நிலையில், திருமலைசமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் வாசு, வல்லம் போலீஸில் புகார் செய்தார்.

புகாரின்பேரில், மிருக வதை தடுப்புச்சட்டத்தின் கீழ் வல்லம் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப் பதிவு செய்து, நாய்களை அடித்து கொன்றவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் 2-ம் எண் நீதித் துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு குமார், மனோகர் இருவரும் நேற்று சரணடைந்தனர். அவர்கள் இருவரையும் நிபந்தனை ஜாமீனில் நீதிபதி விடுவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

14 days ago

மேலும்