ஒகேனக்கல் | துப்பாக்கியுடன் நடமாடிய இளைஞர்: வனத்துறையால் கைது

By செய்திப்பிரிவு

பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் வனச் சரக பகுதியில் வனச்சரகர் சேகர் தலைமையிலான வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒகேனக்கல் அருகே காப்புக்காட்டில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியுடன் நடமாடுவது தெரியவந்தது. அவரைப் பிடித்து விசாரித்தபோது, ஒகேனக்கல் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சோமு (31) என்பதும், அவர் மான் வேட்டைக்கு முயன்றதும் தெரிய வந்தது. அவரை கைது செய்த வனத்துறையினர் பென்னாகரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பினர்.

மற்றொருவருக்கு அபராதம்

அதேபோல, ஒகேனக்கல் வனப்பகுதியில் மான் வேட்டையாடி தலைமறைவாக இருந்து வந்த மாரிமுத்து மகன் சம்பு (எ) சண்முகம் என்பவரை பிடித்து மாவட்ட வன அலுவலர் முன்பு ஆஜர்படுத்தினர். சண்முகத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

14 days ago

மேலும்