மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை: திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருப்பத்தூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (50). இவர், டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி விமலா(31). இவர்களுக்கு மது(8) என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில், சங்கர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டை அடுத்த குடியான குப்பம் ராமகவுண்டர் தெருவில் தனது குடும்பத்துடன் குடியேறினார். சில மாதங்களுக்கு பிறகு, மனைவி மீது சந்தேகமடைந்த சங்கர் அடிக்கடி அவருடன் சண்டையிட்டு தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த 29-04-2020-ல் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மனைவி விமலா தலை மீது பெரிய கல்லை போட்டு சங்கர் கொலை செய்துள்ளார்.

இது குறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் விமலாவின் தாய் ஜோதி புகார் அளித்தார். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை திருப்பத்தூர் 3-வது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடைபெற்றது.

இதில், சங்கர் தனது மனைவி விமலாவை கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து, கொலையாளி சங்கருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அதை கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தோத்ரமேரி தீர்ப்பளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

க்ரைம்

3 hours ago

க்ரைம்

6 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

மேலும்