திருப்பூர் | பிஏபி வாய்க்காலில் குதித்து காதல் ஜோடி தற்கொலை

By செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள கொடுவாயை சேர்ந்தவர் நரேஷ்குமார் (18). காட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பபிஷா (18). இருவரும் பொங்கலூர் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்திருந்தனர்.

ஒரே பள்ளியில் பயின்ற இருவரும் காதலித்துள்ளனர். பிளஸ் 2 -வுக்குபின், கடந்த ஓராண்டாக நரேஷ்குமார் மேற்படிப்பு படிக்காமல் வீட்டில்இருந்துள்ளார். பபிஷா பியூட்டி பார்லர் பயிற்சிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 8-ம் தேதிபியூட்டி பார்லர் பயிற்சிக்கு சென்ற பபிஷா வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் அவிநாசிபாளையம் போலீஸாரிடம் புகார் அளித்திருந்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இந்த நிலையில், பொங்கலூர் அருகே தேவணம்பாளையம் பிஏபி வாய்க்காலில் ஆண் மற்றும் ஒரு பெண் சடலம் மிதந்து வந்தது. இருவரது சடலங்களும் ஒரே துப்பட்டாவால் கட்டப்பட்டிருந்தன.

இதனை பார்த்தவர்கள் இது குறித்து அவிநாசிபாளையம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். சம்பவஇடத்துக்கு சென்ற போலீஸார், சடலங்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்குஅனுப்பி வைத்தனர். போலீஸார் விசாரணையில், பிஏபி வாய்க்காலில்சடலங்களாக மீட்கப்பட்டது நரேஷ்குமார், பபிஷா என்பது தெரியவந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

21 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

மேலும்