புதுச்சேரி | சிறுமியிடம் பாலியல் சீண்டல் - ராஜஸ்தான் வியாபாரி கைது

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் கடைக்கு பொருட் கள் வாங்கச் சென்ற நரிக்குறவ சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வியாபாரியை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ராஜஸ்தானைச் சேர்ந்த சங்கர் லால் (42). இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி உருளை யன்பேட்டை சுப்பையா நகரில் மனைவி, குழந்தைகளுடன் குடியேறி வசித்து வருகிறார். இவர் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள பகுதியில் சொந்தமாக ஃபேன்சி ஸ்டோர் வைத்துள்ளார். இந்த கடையில் நரிக்குறவர் பெண்கள் ஊசி மணி மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை மொத்தமாக வாங்கிபஸ் நிலையம் மற்றும் கடற்கரை சாலை பகுதியில் விற்பது வழக் கம்.

அதன்படி நேற்று முன்தினம் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த ஒருநரிக்குறவர் பெண் தனது 12 வயதுமகளை அந்த கடைக்கு அனுப்பிபொருட்கள் வாங்கி வருமாறு கூறியுள்ளார். அங்கு சங்கர்லால் அந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி அச்சிறுமி தனது உறவினரிடம் தெரிவித்தார். உறவினர் புதுச்சேரி பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்திலும், குழந்தைகள் பாதுகாப்பு குழுவிடமும் முறையிட்டார்.

இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு குழு அளித்த பரிந்துரையின் பேரில், உருளையன் பேட்டை போலீஸார் புகாரை பெற்று, சங்கர்லால் மீது போக்சோபிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துஅவரை கைது செய்தனர். பின்னர்அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதனிடையே சங்கர்லால் மீது பொய் புகார் அளிக்கப்பட்டதாக கூறி சங்கர்லாலுக்கு ஆதரவாக சில வியாபாரிகள் உருளையன்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். போலீஸார் அவர்களை சமரசம் செய்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

11 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

மேலும்