திருவலம்: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த குகையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராமு(50). இவரது மூத்த மகன் சரத்(25). இளைய மகன் சஞ்சய் (22). கடந்த 2019-ம் ஆண்டு மைனர் பெண்ணை கடத்திச்சென்றதாக சஞ்சய் மீது மேல்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பெண் கடத்தல் சம்பவத்தில் சரத்துக்கும் முக்கிய தொடர்பு இருப்பதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்காக சரத்தை மேல்பாடி காவல் நிலையத்துக்கு வருமாறு உதவி காவல் ஆய்வாளர் கார்த்திக் அழைத்தார். அதன்பேரில், மேல்பாடி காவல் நிலையத்துக்கு கடந்த 11-ம் தேதி சென்ற சரத்திடம், எஸ்.ஐ., கார்த்திக் பணம் கேட்டு மிரட்டியதாகவும், ஆபாசமாக பேசி அவரை அவமானப்பத்தியதாகவும் குற்றஞ்சாட்டி மேல்பாடி காவல் நிலையம் எதிரே சரத் தீக்குளித்தார். இதில், படுகாய மடைந்த சரத் மீட்கப்பட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து எஸ்,ஐ., கார்த்திக் தி.மலை மாவட்டத்துக்கு மாற்றப் பட்டார். இதை எதிர்த்து சரத் குடும்பத்தார், ஊர் பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மேல்பாடி காவல் நிலையத்தை நேற்று முன்தினம் முற்றுகை யிட வந்தனர். அவர் களிடம் ஏடிஎஸ்பி சுந்தரமூர்த்தி, காட்பாடி டிஎஸ்பி பழனி, மேல்பாடி காவல் ஆய்வாளர் மனோன்மணி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதற்கிடையே, 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து எஸ்.ஐ., கார்த்திக் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த உத்தரவு பிறப்பித்த ஒரு சில மணி நேரத் தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சரத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதற்கிடையே, 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் மேல்பாடி, குகையநல்லூர், திருவலம் ஆகிய பகுதிகளில் நேற்று காலை குவிக்கப்பட்டனர். மேலும், பொன்னை - திருவலம் சாலையில் நேற்று போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனைத்தொடர்ந்து, சரத் தந்தை ராமு மற்றும் அவரது குடும்பத்தாரிடம் வேலூர் எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதற்கிடையே, எஸ்ஐ கார்த்தியை கைது செய்ய வேண்டும். மற்ற காவலர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி., பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். உயிரிழந்த சரத் குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.1 கோடி நிவாரணமும் அளிக்க வேண்டும் என வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயாவிடம் நேற்று மனு அளித்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
2 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
14 days ago