நெல்லை அருகே நிலத்தகராறில் மோதல்; ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண் உட்பட 3 பேர் கொலை: 3 பேரிடம் போலீஸ் விசாரணை

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே நிலத் தகராறில் ஏற்பட்ட மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் அரசு ஊழியர் உட்பட 3 பேர் கொலை செய்யப்பட்டனர். மேலும் 2 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள நாஞ்சான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேசுராஜ் (65), கட்டிட ஒப்பந்ததாரர். இவரது குடும்பத்துக்கும், அதே ஊரைச் சேர்ந்த உறவினர் அழகுமுத்து குடும்பத்துக்கும் இடையே நிலப் பிரச்சினை உள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நாஞ்சான்குளம் கிராமத்தில் உள்ள பிரச்சினைக்குரிய நிலத்தில் அழகுமுத்து குடும்பத்தினர் நேற்று ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதை ஜேசுராஜ், இவரது தம்பி மரியராஜ் (53), தங்கை வசந்தா (45) உள்ளிட்டோர் கண்டித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் உருவானது.

அழகுமுத்து, அவரது மகன் ராஜமணிகண்டன், மருமகன் செந்தூர்குமார் உள்ளிட்டோர் சேர்ந்து ஜேசுராஜ், மரியராஜ், வசந்தா ஆகியோரை அரிவாளால் வெட்டினர். இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தடுக்க முயன்ற மரியராஜின் மகன் ஆமோஸ்(24), வசந்தாவின் கணவர் ம.ஜேசுராஜ் (45) ஆகியோரும் வெட்டப்பட்டதில் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொ) கிருஷ்ணராஜ் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

உயிரிழந்த வசந்தா பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவுரு எழுத்தராக வேலை பார்த்து வந்தார். மரியராஜ் மத போதகராக இருந்தார். மூவர் கொலை தொடர்பாக அழகுமுத்து, ராஜமணிகண்டன், செந்தூர்குமார் உள்ளிட்டோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

மேலும்