கும்பகோணம்: கும்பகோணம் மாநகராட்சி திமுக கவுன்சிலரின் தந்தை கொலை வழக்கில் சிறுவன் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த ரகுநாதபுரத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரஜாக்(63). ராஜகிரியில் துணிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில், மகள் ஹதீஜாபீவி கும்பகோணம் மாநகராட்சியில் 3-வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார்.
இந்நிலையில், கடந்த 6-ம் தேதி இரவு அப்துல்ரஜாக் தனது வீட்டில் சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்துகிடந்தார். இதுகுறித்து அய்யம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வந்தனர். மேலும், தனிப்படைகள் அமைக்கப்பட்டும் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், அகரமாங்குடி பகுதியில் நேற்று முன்தினம் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த 2 பேரை அய்யம்பேட்டை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் அய்யம்பேட்டை பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த விஜயேந்திரன் மகன் விஷ்வா(18), தாராசுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், இருவருக்கும் அப்துல் ரஜாக் கொலை வழக்கில் தொடர்பிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களிடம் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், கடந்த 9-ம் தேதி மெலட்டூர் பகுதியில் நிகழ்ந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் உள்ள சூர்யா(26) என்பவருடன் விஷ்வாவும், சிறுவனும் சேர்ந்து, அப்துல் ரஜாக்கை கொலை செய்து, ரூ.24 ஆயிரம் ரொக்கம், 5 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றதும், அந்த நகைகளை சூலமங்கலத்தைச் சேர்ந்த ராஜப்பா மகன் பாட்சா(எ) ராஜசெல்வம்(29) என்பவரிடம் அடமானம் வைத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, விஷ்வா, பாட்சா என்கிற ராஜசெல்வம் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
11 hours ago
க்ரைம்
13 hours ago
க்ரைம்
16 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago